தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது


தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 9 May 2021 9:09 PM IST (Updated: 9 May 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி, ஆரோக்கியபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜா மகன் முத்துக்குமார் (வயது 35). இவர் நேற்று சிலுவைப்பட்டி சந்திப்பு வாட்டர் டேங்க் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தாளமுத்து நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது தூத்துக்குடி மத்திய பாகம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story