வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


கணக்கெடுப்பு பணி
x
கணக்கெடுப்பு பணி
தினத்தந்தி 9 May 2021 9:21 PM IST (Updated: 9 May 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதியில் 4-ம்  கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று அதிகாலை தொடங்கியது. 

புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமைகள், கரடி உள்ளிட்ட ஊண் உண்ணிகள் மற்றும் தாவர உண்ணிகள் கணக்கெடுக்கப்படுகிறது.

இந்த கணக்கெடுக்கும் பணி வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக பகுதியிலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 

மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை வனச்சரகர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். 

வனவர் உம்மர் தலைமையில் சின்னக்கல்லார் வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதேபோல் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்குட்பட்ட 16 நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

வால்பாறை வனச்சரக பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். 

இந்த கணக்கெடுப்பானது முதல் மூன்று நாட்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று பெரிய வகை தாவர உண்ணிகள் மற்றும் ஊண் உண்ணிகள் கணக்கெடுக்கப்படுகிறது.


Next Story