கயத்தாறு பகுதியில் மது விற்ற 9 பேர் கைது
கயத்தாறு பகுதியில் மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கயத்தாறு:
கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் கயத்தாறு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோவில்பட்டி மணியாச்சியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திகேயன் (வயது 42), ஆத்திகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி மகன் உச்சிமாகாளி (43), செட்டிகுறிச்சியை சேர்ந்த பேச்சியப்பன் மகன் ஜோதி(20), கும்பகோணம் சிங்காரம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜேந்திரன்( 23), நெல்லை தருவை ஆவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அய்யப்பன்( 21), தெற்கு இலந்தைகுளம் நட்சத்திரம் மகன் சதீஷ்குமார்(23), ராஜபாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்(31), கயத்தாறு கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் இசக்கிபாண்டி(48), அகிலாண்டபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் தட்சணாமூர்த்தி( 56), ஆகியோர் கயத்தாறு பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story