வீடுகளில் தனிமைப்படுத்தி 210 பேர் கண்காணிப்பு


வீடுகளில் தனிமைப்படுத்தி 210 பேர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 9 May 2021 9:44 PM IST (Updated: 9 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் தனிமைப்படுத்தி 210 பேர் கண்காணிப்பு

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டு லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி தொற்று பாதித்தவர்கள் தங்குவதற்கு தனி அறை, அவரை கண்காணிக்க ஒருவர் இருக்க வேண்டும்.  அதன்படி நீலகிரியில் 210 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களிடம் தினமும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஊழியர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்தாலும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story