136 பேருக்கு கொரோனா
136 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 136 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 10 ஆயிரத்து 157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 8 ஆயிரத்து 722 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 288 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 147 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி விட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story