கொரோனா விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி


கொரோனா விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி
x
தினத்தந்தி 9 May 2021 4:28 PM GMT (Updated: 9 May 2021 4:28 PM GMT)

கொரோனா விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு பலர் பலியாகி வருகின்றனர்.இதனை தொடர்ந்து சிலம்பொலி கிராமிய கலைக்குழுவின் சார்பில்  புதிய பஸ்நிலைய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒயிலாட்டம், மரக்கால்ஆட்டம், சிலம்பாட்டம், கருப்பசாமி ஆட்டம், எமதர்ம ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சி மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியுடன் இருத்தல், வீட்டில் இருத்தல் போன்ற பல்வேறு கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வினை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  சிலம்பொலி கிராமிய கலைக்குழு தலைவர் லோகசுப்பிரமணியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story