வெவ்வேறு சம்பவத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை


வெவ்வேறு சம்பவத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2021 11:01 PM IST (Updated: 9 May 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கரூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெவ்வேறு சம்பவத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்
வாலிபர் தற்கொலை
கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). இவரது மனைவி ஜீவா (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன் கோபித்து கொண்டு ஜீவா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாலமுருகன் கடந்த 7-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவலறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு திருக்காம்புலியூர் கரையில் உள்ள ஒரு தோப்பில் 20 வயது வாலிபர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடப்பதாக மாயனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு இறந்து கிடப்பது அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள வெங்கனூரை சேர்ந்த முருகானந்தம் மகன் சுபாஸ் (23) என்பதும், அவர் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சுபாஸ் எதற்காக இங்கு வந்தார்? தற்கொலைக்கு காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story