மாமனார், மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


மாமனார், மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 11:23 PM IST (Updated: 9 May 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மாமனார், மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காரையூர்:
காரையூர் அருகே உள்ள நெருஞ்சிக்குடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). விவசாயி. இவரது மகள் சரண்யாவுக்கும் (27), புல்வயல் கானத்தான்பட்டி பிரபாகரன் (33) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரனுக்கும், சரண்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு சரண்யா, தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். இ்ந்நிலையில், நேற்று தனது மனைவியை அழைத்து செல்ல நெருஞ்சிக்குடிக்கு பிரபாகரன் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்து இருந்து கத்தியை எடுத்து லட்சுமணன், மைத்துனர் சதீஸ்குமார் ஆகிய 2 பேரின் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த 2 பேரும் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில், காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். 

Next Story