மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை + "||" + Robbery

டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை

டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை
கிருஷ்ணராயபுரம் அருகே டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சமத்துவபுரம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடைக்கு பணியாளர்கள் வந்தனர். அப்போது கடையின் சுவற்றில் துளைபோடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு ரக மதுபானங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மதுபானங்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
 இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------

தொடர்புடைய செய்திகள்

1. காவலாளியை கட்டிப் போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை
காளையார்கோவில் அருகே காவலாளியை கட்டி போட்டு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. வெள்ளோட்டில் 2 வீடுகளில் 7¼ பவுன் நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளோட்டில் 2 வீடுகளில் 7¼ பவுன் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
4. மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை
மூங்கில்துறைப்பட்டு அருகே மளிகைக்கடை உரிமையாளர் வீ்ட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. லாரி டிரைவர்களை கொன்று சரக்குகள் கொள்ளை: நாட்டிலேயே முதல் முறையாக 12 பேருக்கு தூக்கு தண்டனை; ஆந்திர கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
லாரி டிரைவர்களை கொன்று சரக்குகளை கொள்ளையடித்த வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து ஆந்திர கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.