திருமயத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


திருமயத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது  டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 9 May 2021 11:27 PM IST (Updated: 9 May 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

திருமயம்:
தூத்துக்குடியிலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி புதுக்கோட்டை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமயம் அருகே உள்ள மேலூர் கிராம விலக்கில் லாரி வந்தபோது லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story