2-வது அலையில் புதிய உச்சம்: மேலும் 236 பேருக்கு கொரோனா தொற்று


2-வது அலையில் புதிய உச்சம்: மேலும் 236 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 May 2021 11:32 PM IST (Updated: 9 May 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் மேலும் 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை:
236 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையில் தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக மேலும் 236 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 214 ஆக அதிகரித்தள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 166 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 1,151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 168 ஆக உள்ளது.
அரிமளம்
அரிமளம் ஒன்றியத்தில் நேற்று என்.நல்லிபட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயது ஆண், கே.செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 44 வயது ஆண், நமணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 51 வயது பெண், பெருங்குடி கிராமத்தை சேர்ந்த 50 ஆண், கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண், கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த 29 வயது ஆண், ஆளப்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த 62 வயது பெண், புதுநிலைபட்டி கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண், அரிமளம் பாண்டியன் தெருவை சேர்ந்த 39 வயது ஆண், ஓணாங்குடி முஸ்லிம் தெருவை சேர்ந்த 35 வயது ஆண், நெடுங்குடி கைலாசபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 32 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 37 வயது பெண், கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது ஆண் ஆகிய 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story