திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தகவல்
x
தினத்தந்தி 9 May 2021 11:35 PM IST (Updated: 9 May 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து ஊரடங்கு குறித்து போலீசார் கண்காணிப்பார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

திருப்பத்தூர்

முழு ஊரடங்கு

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதிவரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. கடைகளில், கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. 

ஊரடங்கு குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-

42 இடங்களில் சோதனைச்சாவடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆந்திரா, கர்நாடக எல்லைப் பகுதிகளான 14 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணியனப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

நெடுஞ்சாலை ரோந்து பணியில் 14 வாகனங்களில் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள். மைக் இணைக்கப்பட்ட 18 இரு சக்கர வாகனம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊரடங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அவசரத் தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். 

அபராதம் விதிக்கப்படும்

மீறி வருபவர்கள் ஊரடங்கு குறித்து அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். அரசு அனுமதித்த நேரத்தைத் தவிர்த்து இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 

காவல் துறையினர், பொதுமக்களிடம் ஊரடங்கு குறித்து எடுத்துக்கூறி அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள், அறிவுரைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story