பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தேவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பசாமி (புதுக்கோட்டை), சசிகுமார் (அறந்தாங்கி) ஆகியோர் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பூதகுடி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்ற 3 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்த ஒரு ஆம்னி பஸ்சும் சாலை வரி கட்டாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட போக்குவரத்து அலுவலர் அந்த 3 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தார். மேலும் பஸ்களில் இருந்த பயணிகளை மாற்று வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story