அச்சக உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு


அச்சக உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 9 May 2021 11:36 PM IST (Updated: 9 May 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

அச்சக உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்
கரூர் ஆத்தூர் உதயாநகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 66). இவர் சொந்தமாக அச்சகம் நடத்தி வருகிறார். கடந்த 2 நாளைக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு அச்சகத்திற்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் அலமாரியில் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் வழக்குப்பதிந்து, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story