அனுமதியில்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற 2 தனியார் பஸ்கள் பறிமுதல்
காங்கேயத்தில் இருந்து பீகார் மாநிலத்துக்கு அனுமதியில்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற 2 தனியார் பஸ்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கேயம்
காங்கேயத்தில் இருந்து பீகார் மாநிலத்துக்கு அனுமதியில்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற 2 தனியார் பஸ்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
பீகாருக்கு
காங்கேயம் பகுதியில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது காங்கேயம் பஸ் நிலைய நுழைவு வாயில் அருகே ஒரு தனியார் பஸ் வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்ததில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட இந்த பஸ்சில் பீகார் மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்காக 59 பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பயணிக்கும் கட்டணமாக ரூ.3,500 வசூலித்தது தெரியவந்தது.
மேலும் ஒரு தனியார் பஸ், காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அனுமதியில்லாமல் பீகாருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்த பஸ் காங்கேயத்தில் 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு பின்னர் ஈரோட்டிலும், சேலத்திலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பீகாருக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
2 பஸ்கள் பறிமுதல்
இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முறையான அனுமதியின்றி பீகாருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த 2 பஸ்களையும் காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.
இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
இந்த 2 தனியார் பஸ்களும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட 2 பஸ் உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அபராதம் விதிப்பார். இதில் ஒரு பஸ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பெயர் மாற்றிஇருந்ததோடு, தமிழ்நாட்டு பதிவு எண்ணையும் மாற்றாமல், அப்படியே முறைகேடாக பஸ்சை இயக்கி வந்தது தெரிய வந்தது. இதற்காகவும் அபராதம் மற்றும் வரி விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story