மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி


மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 10 May 2021 1:04 AM IST (Updated: 10 May 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே திருக்குறுங்குடியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

ஏர்வாடி, மே:
திருக்குறுங்குடி ராமானுஜம் புது தெருவை சேர்ந்தவர் பரமசிவன் என்ற கணேசன் (வயது 55). எலக்ட்ரீசியன். இவருக்கு இசக்கியம்மாள், தெரேசா அம்மாள் ஆகிய 2 மனைவிகளும், 3 மகன்களும் உள்ளனர். நேற்று மதியம் திருக்குறுங்குடி ஊருக்கு அருகே எம்பெருமனார் சன்னதி பகுதியில் உள்ள தோட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனை சரி செய்வதற்காக மின்வாரிய ஊழியர்களுடன் பரமசிவனும் சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைக்க முயன்ற பரமசிவன் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருக்குறுங்குடி போலீசார் விரைந்து சென்றனர். பரமசிவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story