வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் புதிதாக 182 பேருக்கு கொரோனா


வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் புதிதாக 182 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2021 1:23 AM IST (Updated: 10 May 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் புதிதாக 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

வள்ளியூர், மே:
வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 33 பேர், தெற்கு கருங்குளத்தில் 19 பேர், திசையன்விளையில் 18 பேர், வள்ளியூர், பணகுடியில் தலா 12 பேர், கூடங்குளத்தில் 11 பேர், உவரியில் 8 பேர், இருக்கன்துறை, காவல்கிணறு, ஸ்ரீரங்கநாராயணபுரத்தில் தலா 7 பேர், பழவூரில் 5 பேர் உள்பட 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story