வீரவநல்லூரில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு


வீரவநல்லூரில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 1:28 AM IST (Updated: 10 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூரில் பெண்ணை தாக்கி 4½ பவுன் தங்க நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

சேரன்மாதேவி, மே:
வீரவநல்லூரில் பெண்ணை தாக்கி 4½ பவுன் தங்க நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் அண்ணாநகர் மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி தேவி (வயது 60). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று அதிகாலையில் தேவி, வீரவநல்லூர் மெயின் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று தேவியை வழிமறித்து தாக்கினர். இதில் தேவி மயங்கி விழுந்தார்.

வலைவீச்சு

பின்னர் அந்த நபர்கள், தேவி அணிந்து இருந்த 4½ பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர். 
இதில் படுகாயம் அடைந்த தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை தாக்கி நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story