ஈரோடு ஆத்மாவில் இறுதிச்சடங்கு மேற்கொள்ள ஒரே கட்டணம் நிர்ணயம்; மாநகராட்சி ஆணையாளர் தகவல்
ஈரோடு ஆத்மாவில் இறுதிச்சடங்கு மேற்கொள்ள ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு ஆத்மாவில் இறுதிச்சடங்கு மேற்கொள்ள ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
கூடுதல் கட்டணம்
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு நகரில் ஈரோடு மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து ஆத்மா என்ற பெயரில் மின் மயானத்தை அமைத்து உள்ளது.
இந்த மின் மயானத்தில் இயற்கையான இறப்புகளுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், கொேரானா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஒரே கட்டணம்
கொரோனா சிகிச்சை முடிந்து, பொருளாதார சிரமத்தில் இருப்போருக்கு இந்த கூடுதல் கட்டணம் பெரும் சுமையாக இருந்தது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தினை கருத்தில் கொண்டு அனைத்து உயிரிழப்புகளுக்கும், ஆத்மாவில் இறுதிச்சடங்கு மேற்கொள்ள ஒரே கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story