தி.மு.க.வில் இணைந்தனர்
தென்காசியில் அ.தி.மு.க.வினர், தி.மு.க.வில் இணைந்தனர்.
தென்காசி, மே:
குற்றாலம் அ.தி.மு.க. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை வார்டு செயலாளரும் தென்காசி- குற்றாலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவருமான சுரேஷ், குற்றாலம் அ.தி.மு.க.முன்னாள் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவி லதாவின் கணவருமான அசோக் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமாரசாமி, முன்னாள் மேலவை பிரதிநிதி பிச்சையா, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் குமார் உள்பட பலர் தென்காசியில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சிவபத்மநாதன் வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனி துரை, ஏ.ஆர்.எம்.அழகுசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் ராமராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story