கொரோனா பரிசோதனை முகாம்
சிவகிரியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
சிவகிரி, மே:
சிவகிரி நகர பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, டி.டி.இந்து ெதாடக்கப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின. சிவகிரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாந்தி சரவணபாய் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் நவராஜ், சுகாதார மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் வட்டார சுகாதார ஆய்வாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர்கள் விஷ்ணு, ராஜாராம் மற்றும் டாக்டர் எஸ்.ராசி, மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா, மருந்தாளுனர் கவுசல்யா, லேப் டெக்னிசியன் ஜான்சன் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story