மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 2:20 AM IST (Updated: 10 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கீழப்பழுவூர்:
திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் பிரபாகரன்(வயது 30). இவர் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் அருங்கால்பாளையத்தில் இருந்து செம்மந்தக்குடி கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வழியில் ேமாட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story