டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 38). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை அருகே பெரியம்மாபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் பெரம்பலூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூரில் இருந்து உடும்பியம் நோக்கி கரும்பு ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் சென்றது. கிருஷ்ணாபுரம் அரிசி குடோன் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், டிராக்டரும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார், அங்கு சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story