மது வாங்க நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்


மது வாங்க நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 10 May 2021 2:20 AM IST (Updated: 10 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை முன்பு நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கிச்சென்றனர்.

தா.பழூர்:
தா.பழூர் பகுதியில் நேற்று காலை முதலே கடை வீதிகளில் அனைத்து கடைகளிலும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக வந்த பொதுமக்களின் கூட்டம் மிதமாகவே இருந்தது. ஆனால் 15 நாட்கள் முற்றிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால், தா.பழூரில் சுத்தமல்லி சாலையில் அருகருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளிலும், காலையில் கடை திறந்ததில் இருந்தே மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். மாலையில் கடை மூடப்படும் வரை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் மது பிரியர்கள் வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடையில் நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றது.


Next Story