சூலூரில் கல்லுக்குழியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி


சூலூரில் கல்லுக்குழியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 2:38 AM IST (Updated: 10 May 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் கல்லுக்குழியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

கருமத்தம்பட்டி

சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சூலூர் தென்றல் நகர் பகுதியில் உள்ள கல்லுக்குழிக்கு குளிக்கச் சென்றுள்ளார். 

அங்கு குளித்து கொண்டிருந்தபோது திடீரென சஞ்சய் தண்ணீரில் கல்லுக்குழியில் மூழ்கினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சூலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

 தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கல்லுக்குழிக்குள் இறங்கி சஞ்சயை தேடினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சஞ்சய் பிணமாக மீட்கப்பட்டார். 

Next Story