டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்
கொரோனா சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
கொரோனா சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் சிகிச்சை பணி
கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் ஏற்பட்டதிலிருந்து டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் எவ்வித ஓய்வும் இல்லாமல் சிகிச்சை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்து இல்லை என டாக்டர்களிடம் கோபத்துடன் வாக்குவாதம் செய்யும் நடைமுறையையும் டாக்டர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
சிறப்பு ஊதியம்
தமிழக அரசு தொடர் சிகிச்சையில் பணியில் உள்ள டாக்டர்களுக்கு எவ்வித சிறப்பு ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது.
கடந்தாண்டு கொரோனா பாதிப்பின் போது கொரோனா வார்டுகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு இடையில் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன் தனிமைப்படுத்தி கொள்வதற்கு ஓட்டலில் தங்கும் வசதி, உணவு வழங்கப்பட்டது. ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் வீட்டிற்கு செல்லும் நிலை இருந்து வந்தது.
நடவடிக்கை
ஆனால் தற்போது அந்த சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. கொரோனா பணியில் உள்ள டாக்டர்கள் நேரடியாக தனிமைப்படுத்திக் கொள்ள செலவு செய்ய வேண்டி உள்ளது.
இதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள படாமல் டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் இத்தகைய சிகிச்சை வார்டுகளிலிருந்து நேரடியாக வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளதால் அவர்கள் பெரும் மன பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் போதிய மருத்துவ பணியாளர்களும், டாக்டர்களும் இல்லாத நிலையில் தற்போது தொடர்ந்து ஓய்வில்லாமல் மருத்துவ பணியாளர்களும், டாக்டர்களும் கொரோனாசிகிச்சை வார்டுகளில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
உத்தரவு
எனவே கூடுதல் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் நியமித்தால் கொரோனாவார்டுகளில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
தமிழக அரசு கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு குறைந்தபட்சம் 2 மாதம் சிறப்பு ஊதியம் வழங்கவும், மேலும் அவர்கள் கொரோனா வார்டுகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள ஓட்டல்களில் தங்க வசதி செய்து தரவும், தனிமைப்படுத்தப்பட்ட பின்பு பரிசோதனை செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story