சேலம்மாவட்டத்தில் புதிதாக 639 பேருக்கு நோய் தொற்று: கொரோனா பலி600ஐ நெருங்குகிறது


சேலம்மாவட்டத்தில் புதிதாக 639 பேருக்கு நோய் தொற்று: கொரோனா பலி600ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 10 May 2021 3:49 AM IST (Updated: 10 May 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பலி600ஐ நெருங்குகிறது

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 639 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நேற்று 4 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 600-ஐ நெருங்குகிறது.
639 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 550 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 344 பேர், ஓமலூரில் 46 பேர், வீரபாண்டியில் 36 பேர், பனமரத்துப்பட்டியில் 23 பேர், அயோத்தியாப்பட்டணம் 22 பேர், மேச்சேரியில் 18 பேர், நங்கவள்ளியில் 17 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 16 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 46 ஆயிரத்து 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 762 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம் 3 ஆயிரத்து 423 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
4 பேர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 64 மற்றும் 55 வயதுடைய ஆண்களும், 54, 73 வயதுடைய பெண்களும் என மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் 4 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பலி விரைவில் 600-ஐ நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story