ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்


ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 May 2021 10:50 AM IST (Updated: 10 May 2021 10:50 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, 

ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடையும் - ரம்ஜான் அன்று அறுசுவை உணவு தயாரிக்க தேவையான பொருட்களையும் வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜானையொட்டி புத்தாடைகளையும், பரிசு பொருட்களையும் வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேற்று நடந்தது. தனது இல்லத்திற்கு வந்த இஸ்லாமியர்களை மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்றார்.

பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமது இல்லத்தில் - கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் - பரிசு பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இல்லங்களுக்கு சென்று....

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் நல உதவிகள் வழங்கியதை தொடர்ந்து, 2,200 பேருக்கு கொளத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், இஸ்லாமியர்களின் இல்லங்களுக்கே சென்று புத்தாடையையும், பரிசு பொருட்களையும் வழங்க இருக்கிறார்கள்.

Next Story