திருச்செந்தூர் பகுதியில் முககவசம் அணியாத 7 பேருக்கு அபராதம்


திருச்செந்தூர் பகுதியில் முககவசம் அணியாத 7 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 May 2021 8:43 PM IST (Updated: 10 May 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் முககவசம் அணியாத 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் யூனியன் ஆணையர் ராமராஜ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், சுகாதார ஆய்வாளர் ஜெய்சங்கர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டணம், காந்திபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் முக கவசம் அணியாமல் வந்த 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் காமராஜர் சாலையில் 12 மணிக்கு பிறகும் செயல்பட்ட பேக்கரி கடைக்கு அதிகாரிகள் நேரில் சென்று கடையை அடைக்குமாறு அறிவுறுத்தினர்.

Next Story