மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் என 10 இடங்களில் 729 படுக்கை வசதிகள் உள்ளன. நேற்று வரை 500 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 229 படுக்கைகள் காலியாக உள்ளது.
கொரோனா பராமரிப்பு மையங்கள் 8 இடங்களில் உள்ளன. 1000 படுக்கைகள் அங்கு உள்ளன. இவற்றில் 456 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 544 படுக்கைகள் காலியாக உள்ளது. அதுபோல் 25 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. 969 படுக்கைகள் உள்ளன. 844 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.125 படுக்கை காலியாக உள்ளது. நேற்று முன்தினம் வரை தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 842 படுக்கைகள் வசதிகள் இருந்தன. ஆனால் நேற்று ஒரே நாளில் 127 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
----
Related Tags :
Next Story