ரூ.30 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கைது


கையாடல் செய்த மேலாளர் கைது
x
கையாடல் செய்த மேலாளர் கைது
தினத்தந்தி 10 May 2021 9:12 PM IST (Updated: 10 May 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

ரூ.30 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கைது

கோவை 

சூலூர் காங்கேயம் பாளையத்தில் "பல்மர் லாரி லிமிடெட் "என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு விமான டிக்கெட்டுகள் விற்பனை செய்வது வழக்கம். இந்த நிறுவனத்தில் மேலாளராக திருப்பூரை சேர்ந்த கே.ராஜூ வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நிறுவனத்தில் விமான டிக்கெட் விற்ற பணம் ரூ 29 லட்சத்து 98 ஆயிரத்து 217 கையாடல் செய்யப்பட்டு இருப்பது முதன்மை அதிகாரி சங்கர் என்பவரின் தணிக்கையில் தெரியவந்தது. 

இதுகுறித்து சங்கர் கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். 

போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த மோசடிகள் தொடர்பாக மேலாளர் ராஜூவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story