2 நாட்களில் ரூ.17¼ கோடிக்கு மது விற்பனை


2 நாட்களில் ரூ.17¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 10 May 2021 9:23 PM IST (Updated: 10 May 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ.17¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

நாகப்பட்டினம்:
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ.17¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது. 
இந்த முழு ஊரடங்கு காரணமாக கடந்த 8-ந் தேதியும், நேற்று முன்தினமும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மளிகை கடைகள், டீக்கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.
ரூ.17 கோடியே 35 லட்சம்
முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாகவும், சாக்கு மூட்டைகளிலும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
 நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் 8-ந் தேதி ரூ.7 கோடியே 87 லட்சத்து 2 ஆயிரத்து 510-க்கு மது விற்பனையும்,நேற்று முன்தினம் ரூ.9 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரத்து 560-க்கும் மது விற்பனையும் நடைபெற்றது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.17 கோடியே 35 லட்சத்து 91 ஆயிரத்து 70-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

Next Story