கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி ஒரே நாளில் 895 பேருக்கு தொற்று


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி ஒரே நாளில் 895 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 10 May 2021 10:11 PM IST (Updated: 10 May 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 895 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 895 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
4 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 48 வயது ஆண் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2-ந் தேதி ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 8-ந் தேதி இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 45 வயது பெண், கொரோனா பாதிப்பு காரணமாக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 8-ந் தேதி இறந்தார்.
அதே போல 28 வயது ஆண், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் 2-ந் தேதி கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 8-ந் தேதி இறந்தார். கிருஷ்ணகிரியை சேர்ந்த 47 வயது ஆண், கொரோனா பாதிப்பால் கடந்த 30-ந் தேதி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.
895 பேருக்கு தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 256 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 984 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story