ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 50 கிலோ கஞ்சா கடத்தல் அண்ணன், தம்பி கைது


ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 50 கிலோ கஞ்சா கடத்தல் அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 10 May 2021 10:30 PM IST (Updated: 10 May 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 50 கிலோ கஞ்சா கடத்திய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.


சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று விருப்பாட்சி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது விருப்பாட்சி ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும்படி வந்த காரையும், 3 மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், காரில் வந்த 2 பேரும் தப்பியோடி விட்டனர். 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரில் 50 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் ஆகும். கஞ்சாவும், கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விருப்பாட்சி கணவாய் தோட்டத்தை சேர்ந்த பெருமாள்சாமி மகன்கள் சரவணன் (வயது 47), கார்த்திக் (33) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா பரிசு வழங்கினார். 



Next Story