ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவிந்தனர்


ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவிந்தனர்
x
ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவிந்தனர்
தினத்தந்தி 10 May 2021 5:04 PM GMT (Updated: 10 May 2021 5:04 PM GMT)

ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவிந்தனர்

கோவை, மே.11-
 கடந்த சில நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் இந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 கோவை மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகள் ஏராளமானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை செல்லும் நிலை இருந்து வந்தது.

இதனை போக்கும் வகையில் கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 8-ந் தேதி தொடங்கியது. முதல் நாளன்று 500 ரெம்டெசிவிர் மருந்து கொண்டு வரப்பட்டு, அன்றைய தினமே விற்பனையானது. 

இதைத்தொடர்ந்து 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. 

இதற்காக கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் டாக்டர்கள் எழுதிக் கொடுத்து இருந்த சீட்டுடன் காலை 6 மணிக்கெல்லாம் வந்து குவிந்தனர். 

பின்னர் அவர்கள் அங்கு டோக்கன் பெற்றுக்கொண்டு, வரிசையில் நின்று மருந்தை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் 500 ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டதாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.

Next Story