கண்மாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


கண்மாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 10 May 2021 10:59 PM IST (Updated: 10 May 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கண்மாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

தொண்டி, 
திருவாடானை தாலுகா ஓரியூர்கோட்டை நகர் பகுதியில் உள்ள ஓரியூர் கண்மாயில் நேற்று  45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். இது பற்றி அவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ஓரியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் எஸ்.பி.பட்டினம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட் டத்திற்கு பின்னர் அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை மீட்டனர். பச்சை நிற சட்டையும் கருப்பு நிற கால் சட்டை அணிந்து தாடியுடன் இருந்த அவரது பெயர், முகவரி தெரியாததால் போலீசார் சடலத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story