5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் அதிக அளவில் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா, கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வராயன் மலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னதிருப்பதி, கோணம்காடு ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story