நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 445 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 445 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டு 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
25 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-470, ஐதராபாத்-433, விஜயவாடா-446, மைசூரு-455, மும்பை-490, பெங்களூரு-455, கொல்கத்தா-515, டெல்லி-466.
கறிக்கோழி
கறிக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.11 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நாமக்கல் மண்டலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டையின் அளவு கணிசமாக உயர்ந்து உள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கத்தால் முட்டையின் தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
========
Related Tags :
Next Story