2 மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள்


2 மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள்
x
தினத்தந்தி 10 May 2021 6:27 PM GMT (Updated: 10 May 2021 6:27 PM GMT)

கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் நிதி நிறுவன ஊழியர்கள் அமர்ந்தனர்.

திருவரங்குளம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், 2 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று வாரந்தோறும் கடன் தவணை தொகையை செலுத்தி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக வரவு, செலவு வைத்துள்ள தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடன் தவணைதொகையை தாமதமாக பெற்றுக்கொண்டது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை பரவலின் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் தவணை தொகை வசூல் செய்வதற்காக மகளிர் சுய உதவி குழு தலைவர் உள்ளிட்டவர்கள் வீட்டு வாசலில் வந்து அமர்ந்து கொண்டு கடன் தொகையை செலுத்தினால் தான் செல்வோம் என்று பிடிவாதமாக இருந்தனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ஊரடங்கு உத்தரவு முடிவு பெற்ற பின் கடன் தொகையை செலுத்துவதாகவும் அதுவரை தங்களை தனியார் நிதி நிறுவனம் தொந்தரவு செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதியம் சாப்பிட்டு வருவதாக சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் திரும்பி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story