வேலூர் மாவட்டத்தில் 2-வது டோஸ் கொரோனா மருந்துக்காக ஒரு லட்சம் பேர் காத்திருப்பு

வேலூர் மாவட்டத்தில் 2-வது டோஸ் கொரோனா மருந்துக்காக ஒரு லட்சம் பேர் காத்திருப்பு
x
தினத்தந்தி 10 May 2021 6:28 PM GMT (Updated: 10 May 2021 6:28 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 2-வது டோஸ் கொரோனா மருந்துக்காக ஒரு லட்சம் பேர் காத்திருப்பு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 வகை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் ஏராளமானவர்கள் முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் தற்போது சுமார் 1 லட்சம் பேர் 2-வது டோஸ் போட உள்ளனர். ஆனால் அதற்கான தடுப்பூசி போதுமானதாக இல்லை. தேவையான தடுப்பூசி மருந்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், அவை வந்தபின்னர் அனைவருக்கும் போட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story