திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை
கொரோனா வார்டில் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக அவர் கொரோனா பாதுகாப்பு கவச உடையணிந்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு சென்றார்.
காய்ச்சல் பரிசோதனை மையம், கொரோனா வார்டு, காய்ச்சல் வார்டு, தீவிர நோயாளிகள் வார்டு, திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அலகு, நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவரது தலைமையில் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story