புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை சுயேச்சை வேட்பாளர் சாவு
பட்டுக்கோட்டை சுயேச்சை வேட்பாளர் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளாரக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் இருந்ததா? அதனால் இறந்தாரா? என மருத்துவமனை வட்டாரத்தில் கேட்ட போது அதிகாரிகள் பதில் தெரிவிக்கவில்லை.
Related Tags :
Next Story