வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது


வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 May 2021 1:44 AM IST (Updated: 11 May 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி இந்திரா காலனியில் வசித்து வருபவர் வீரபத்திரன் (வயது 60). இவரது மனைவி பூமா, மகன் சங்கிலிமுருகன் ஆகிய 3 பேரும் ஆண்டிபட்டி பஸ் நிறுத்தத்தில் நுங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த  வேலன்(வயது 23) என்பவர் வீரபத்திரனிடம் வந்து நுங்கு கேட்டுள்ளார் அதற்கு அவர் நுங்கு கொடுத்துவிட்டு அதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர முடியாது என கூறி வீரபத்திரனிடம் வேலன் தகராறு செய்துள்ளார். மேலும் அரிவாளால் வீரபத்திரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வேலனை கைது செய்தனர்.

Next Story