கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வினியோகம்
கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண உதவி தொகையில் முதல் தவணை ரூ.2 ஆயிரம் பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களான 1 லட்சத்து 82 ஆயிரத்து 684 பேருக்கு ரேஷன் கடை மூலம் வருகிற 15-ந்தேதி முதல் வழங்கப்படவுள்ளது. அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க ஏதுவாக, ஒரு நாளைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களில் 200 பேருக்கு கொரோனா நிவாரண உதவித்தொகையில் முதல் தவணை வழங்குவதற்கு ஏதுவாக வழங்கும் நாள், நேரம் ஆகிய விபரங்கள் குறிப்பிடப்பட்ட டோக்கனை நேற்று முதல் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடுதோறும் வினியோகம் செய்து வருகின்றனர். நாளை (புதன்கிழமை) வரை டோக்கன் வினியோகம் நடைபெறவுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா நிவாரண உதவித்தொகையில் முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை பெற்று கொள்ளுமாறு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story