மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை


மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2021 2:04 AM IST (Updated: 11 May 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் கத்தரி வெயிலின் தாக்கம் பொதுமக்களை மிகவும் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று திடீரென கோடை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் உள்ள கடைவீதி பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த பகுதியில் மழை காலங்களில் கனமழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதும், அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதும் வழக்கமாக உள்ளது. எனவே மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது. நேற்று பெய்த கோடை மழையால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story