அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்


அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்
x
தினத்தந்தி 11 May 2021 2:04 AM IST (Updated: 11 May 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று தொடர்பான அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தொடர்பான அவசர தேவைகளுக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த கட்டுப்பாட்டு அறை மூலமாக நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் வினியோகம் குறித்தும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் மருந்து பொருட்களின் விவரங்கள் குறித்தும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகள் குறித்தும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்கள், அவசர உதவி, மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு நிலவரம் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களுக்கும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலும், 04329-228709 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story