தலைவாசல் அருகே ஊராட்சி செயலாளர் கொரோனாவுக்கு பலி
ஊராட்சி செயலாளர் கொரோனாவுக்கு பலியானார்
தலைவாசல்:
தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஊராட்சியில் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் தங்கராஜூ (வயது 38). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தங்கராஜூ ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கொரோனாவுக்கு ஊராட்சி செயலாளர் பலியான சம்பவம் நாவக்குறிச்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாவக்குறிச்சியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
Related Tags :
Next Story