தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை


தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 11 May 2021 2:38 AM IST (Updated: 11 May 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இன்று முதல் 24ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் சுகாதாரத்துறை சார்பாகவும் கொரோனா பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது முழு ஊரடங்கு காரணமாக காய்கறி, மெடிக்கல், மளிகைகடை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன சாலைகள் அணைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மாநில எல்லை சாலையான ராமாபுரம், பந்துகநல்லி, அருள்வாடி, எத்திகட்டை அனைத்து எல்லை சாலைகளும் முழுமையாக அடைக்கப்பட்டது பாரதிபுரம், கும்டாபுரம், காரப்பள்ளம், கேர்மாளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர் அவசர தேவை மற்றும் காய்கறி வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்படுகிறது கர்நாடக இருந்து அவசர தேவைக்கு தமிழகத்திக்குள் நுளையும் அனைத்து வாகனத்தின் எண், பெயர் கைபேசி என்னை போலீசார் சேகரித்து தீவிர வாகன தணிக்கைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர் எப்போதும் பரபரப்பாக இருக்கும் திம்பம் மலைப்பாதை வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி உள்ளது..


Next Story