57 மதுபாட்டில்கள் பறிமுதல்
சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 57 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அரசு டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுக்கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல்விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சோலை காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 31), கார்த்திக் (35) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 57 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story