கிருமிநாசினி தெளிக்கும் பணி


கிருமிநாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 11 May 2021 2:43 AM IST (Updated: 11 May 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகராட்சி, சுகாதார துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நகராட்சி சார்பில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம், நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை நகராட்சி ஆணையர் சாகுல் ஹமீது தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை வளாகம், பந்தல்குடி ரோடு, எம்.எஸ். கார்னர், அகமுடையார் மகால், மெயின் பஜார் உள்ளிட்ட நகர் முழுவதும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story